பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 காட்சி 25] இரத்தக் கண்ணீர் (தென்றல் மாளிகை. பல்லக்கு போன்ற குதிரை வண்டிகள் புறப்படுவதற்குத் தயாராக இருக்கின்ற றன. குதிரை வீரர்கள் தத்தம் புரவிகளில் ஏறி ஆயத்தமாகிறார்கள். படையில் சேர்க்கப்பட்ட ஆட்கள் வண்டிகளில் ஏற்றப்படுகிறார்கள். தளபதி செல்வதற்கான அலங்காரமான வண்டி யும் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. பாளையக் காரர் பலதேவரும், திருசங்கும், சுகதேவும், தளபதிக்கு முன்னே நின்றுகொண்டு வழி யனுப்பத் தயாராயிருக்கிறார்கள். வெற்றிவேலன் ஒரு வீரனிடம், "எங்கே அந்த முத்தன்? அவனையும் கொண்டுவந்து வண்டியில் தள்ளுங்கள்' உடனே வீரர்கள் உள்ளே ஓடுகிறார்கள். வேதாளம், தளபதியின் காதில் ரகசியமாகச் சொல்லுகிறான், அவனை ஊர் தாண்டும் வரையில் நடக்க வைத்தே கொண்டுபோனால்-அவளைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்" வெற்றிவேலன்: ஆமாம் ! அந்தக் கழுதையை விலங் கிட்டு இழுத்துச் செல்லுங்கள். ஊர் தாண்டும் வரையில் அவன் நடந்தே வரட்டும். உள்ளேசென்ற வீரர்கள், முத்தன் பூட்டப் பட்டிருக்கும் அறையைத் திறக்கிறார்கள். முத்தன்: ஏன்-எனக்கு விடுதலையா?