பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

45 ஒரு வீரன்: மு. கருணாநிதி 85 இங்கேயிருந்து விடுதலை. ஆனால் விடுதலைக் குப் பிறகுதான் இருக்கின்றன வேதனைகள்! வெறும் பயலே ! இந்த விடுதலையை சுவைத்துப்பார். ஊமை யாக கிடப்பாய். உடுத்த உடை கிடைக்காது. பசிக்கு உணவு கிடையாது. கொண்டுபோங்கள் கர்வம் பிடித்த ஓநாயை! இந்த முத்தன் : சரிதான் - வேங்கை புரத்து மனிதர்கள் எல் லோருமே இப்படித்தானா? வீரன் : பேசாதே ! விலங்கை மாட்டிக்கொள். முத்தன் இழுத்து வரப்படுகிறான். அதற் குள் தெருப்புறத்தில் தளபதியிடம் நின்று கொண்டிருந்த வேதாளம், வீதியிலே ஒரு பெண் வேகமாக ஓடிவருவதைக் காண்கிறான். உடனே அவன் அவசர அவசரமாக தென்றல் மாளிகையி லிருந்து புறப்பட்டு அந்தப் பெண்ணை நோக்கிப் போகிறான். வேதாளம்: வீதியில் எங்கம்மா ஓடுகிறாய்? . சுமதி ! நீங்களா? முத்தனைப் பார்த்தீர்களா? ... வேதாளம்: முத்தனுக்காகத்தான் ஓடியாடிக்கொண் டிருக்கிறேன். அவனை இப்போதே வேங்கைபுரம் கொண்டுபோகப் போகிறார்கள். சுமதி: அய்யோ... அவரை நான் பார்க்க வேண்டுமே. வேதாளம்: முடியாது! இனி அவனை விடுவிக்க முடி விடுவிப்பதாயின் நூறு பொன் வேண்டும். யாது 6