பக்கம்:இரத்தினமாலை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பிரபு சோமசுந்தரம் இரத்ன மாலையின் அருகில் வந்ததும் ராமலிங்கம் பிரபுவுக்கு மரியாதை செய்து இரகஸ்யமாய் "பிரபுவே! தயவு செய்து இரத்ன மாலையை வண்டியில் போட்டு வீட்டுக்குக்கொண்டு போங்கள். எல்லாம் வீட்டில் பேசிக்கொள்ளலாம்" என்றார்.

பிரபுவும் தமது ராமலிங்கத்தின் சொற்படியே தனது மோட்டாரில் இரத்ன மாலையை தானும் ராமலிங்கமுமாகப் பிடித்துக்கொண்டு போய் படுக்கவைத்துக் கொண்டு நேரே வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

அத்தியாயம்-2.

ராமலிங்கம் யார் ?


ராமலிங்கம் சங்கரலிங்கம் பிள்ளைக்கும் சண்பகம்மாளுக்கும் ஏகபுத்திரனாகப் பிறந்தவர். இவர்கள் வேலூரில் வசித்து வந்தனா. ராமலிங்கத்தை இளமையில் கற்கப் பள்ளியில் வைத்தனர். இவர் மெட்ரிகுலேஷன் பரிக்ஷை கொடுத்து மேலே மீண்டும் கல்விகற்கப் பிரியப்பட்டு வூரிஸ் காலேஜில் இரண்டு வருஷம் ஸீனியர் எப். எ (F.A) வகுப்பில் தேறினார். இவருக்கு ரசாயன சாஸ்திர ஆராய்ச்சியில் மிகுந்த பழக்கம், அதன் மூலமாகத் துப்பறியும் வேலை செய்வது மிகவும் சுலபமென்பது அவருடைய கொள்கையா இருந்தது. இவ்விதமிருக்கின்ற சமயத்தில் பெற்றோர்கள் பிள்ளைக்குக் கலியாணஞ் செய்யவேண்டு மென்று பெண்தேடிக் கொண்டிருந்தார்கள். இவ விஷயம் கேள்விப்பட்ட நமது ராமலிங்கம் மனம் பொறாராகித் தனது மனதிலேற்பட்டிருந்த துப்பற்றியும் தொழிலை மேற்கொண்டு பேரும் பிரக்கியாதியும் பெறுதற் கெண்ணித் தனது பெற்றோருக்குச் சொல்லிக்கொள்ளாமலே சென்னை சேர்ந்து மண்ணடியில் பவழக்காரத்தெருவில் வசித்துக்கொண்டு வந்து தனது கோரிக்கை யீடேற வேண்டிய பிரயத்தன மெல்லாஞ் செய்து கொண்டு வரும் சமயம் இவரிடம் பல சிக்கலான கேஸ்கள் வர அதில் தலையிட்டு அவைகளைக் கண்டு பிடித்து அரசங்கத்தாரால் அநேக தங்கப் பரிசுகளும் பணப்பரிசு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/10&oldid=1155879" இலிருந்து மீள்விக்கப்பட்டது