பக்கம்:இரத்தினமாலை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

களும் பெற்று மிகப்பிரக்யாதியுடன் வாழ்ந்து வரும் சமயம், சென்னையில் சவுகாரப்பேட்டையில் பெரிய பிரபுவும் கோடீசுரருமான ஜகநாதம்பிரபுவின் வீட்டில் ஒரு கொலைக் கேஸ் கடந்தது. அச்சமயம் சென்னையிலுள்ள போலீசு அதிகாரிகள் அதை ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கமாட்டாமல் விட்டு விட, ஜகந்நாதம் பிரபு மனமுடைந்து தமது புத்திரியைக் கொலை செய்த கொலையாளியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ரூபாய் 50,000 கொடுப்பதாய்வாக்களித்தும், பத்திரிகைகளில் பிரசுரம் செய்துமிருந்ததைப் பார்வையிட்ட ராமலிங்கம் சென்னையில் அரேச விடங்களில் துப்புவைத்தும் நிலங்காமையினால் இதைக் கண்டு பிடிக்காமல் விடுவதில்லை யென்னும் நோக்கத்துடனும், இன்னும் பலவித காரணங் கொண்டும் மதுரை சேர்ந்த இரண்டா மாதம் முன் அத்தியாயத்திற் கண்ட சம்பவம் நிகழ்ந்தது.

இரத்தினமாலையை வீட்டுக்குக் கொண்டு போனதும் ஓர் கட்டி விற் கிடத்தி யவளுக்கு கொடுத்திருந்த குளோரபாரத்தின் வேகத்தை தணிக்ககூடிய மருந்தைக் கொடுத்துச் சிறிதுநேரம் வெந்நீரில் கம்பளியை நனைத்து முகத்திலும் மார்பிலும் ஒத்தடம் கொடுக்கப்படவே குளோரபாரத்தின் வேகம் தணியத்தணிய சிறிது சிறிதாக மூச்சுவர் ஆசம்பித்தது. அதே சமயத்தில் ராமலிங்கம் தனக்குக்கிடைத்த மோதிரத்தையும் காகித உரையையும் விளக்கு வெளிச்சத்தில் எடுத்துப் பார்த்தான். பிரகாச மிகுந்த வைர மோதிரத்தின் ஒளி ராமலிங்கத்தையும் சிறிது தடுமாறச்செய்ததெனினும் அதன் அழகையும் பளபளப்பையும் திருப்பி திருப்பிப் பார்த்துவிட்டுக் கடித உரையைப் பிரித்துப் பார்த்தான். அதில் ஷண்முகம் செட்டியார், மெடல் பாக்டரி, மதுரை என்ற சந்திப்புக் கடிதமும், சவுரிமுத்து, ஏஜெண்டு மெடல் பாக்டரி மதுரை என்றுள்ள சந்திப்புக் கடிதமும், சென்னையிலிருந்து வந்த ஒரு நீண்ட கடிதமும் காணப்பட்டது. இவ்விரண்டையும் அக்கடிதத்தையும் பார்த்துவிட்டு இரத்தினமாலை படுத்திருக்கும் பக்கம் திரும்பினான் அதேசமயம் இரத்னமாலை கண்களை திறந்து பார்த்தாள். சோமசுந்தரம் பிரபுவும் புத்திரியின் அருகில் வந்து,

“குழந்தாய்! இரத்னம் !! இரத்னம் !!!" என்றார்.

இரத்ன மாலை மெள்ள கண்ணை விழித்துப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/11&oldid=1155880" இலிருந்து மீள்விக்கப்பட்டது