பக்கம்:இரத்தினமாலை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இதேசமயம் ராமலிங்கம் அருகில் வந்து மூக்கில் விரலைவைத்துப் பார்த்து இன்னும் சில நேரம் சும்மாயிருங்கள் என்று சொல்லி ஒரு மருந்து புட்டியை பெடுத்துக் குலுக்கி அரையவுன்ஸ் அளவு எடுத்து இரத்தின மாலையின் வாயில் ஊற்றினார். சிறிது நேரத்திற்கெல்லாம் இரத்ன மாலைக்குப் பிரக்ஞை வந்து விட்டது. அவள் எழுந்து உட்கார்ந்தாள். அவளுக்குக் குடிக்ககஞ்சி கொடுக்கப்பட்டது. அதை குடித்துக்கொண்டிருக்கும் சமயம் ராமலிங்கம் ஒருகடிதத்தை சோமசுந்தரம் பிரபுவினிடம் கொடுத்து விட்டுப் போனார்.

ராமலிங்கம் கொடுத்த கடிதத்தை பிரபு பிரித்துப் படிப்பதில் கோக்கமாயிருந்ததனாலும், குமாரத்தி கஞ்சிகுடிப்பதைக் கவனிக்கும் சமயம்மான தாறும் தன்னிடம் கடிதம் கொடுத்தவரைக் கவனிக்கவே யில்லை, இரத்ன மாலை கஞ்சி குடித்தானதும், புத்திரியை நோக்கி, "குழந்தாய்! இரத்தினம்!" என்று கூப்பிட்டார்.

இரத்னமாலை தகப்பனரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மீண்டும் மஞ்சத்தில் படுத்து நித்திரை செய்பலாயினாள்.

பிரபு சோமசுந்தரம் குமாரத்தி நித்திரை போவதைக்கண்டு மன நிம்மதியுடன் ராமலிங்கம் கொடுத்த கடிதத்தைப் பிரித்து வாசிக்கலாயினர்.

“கனம் சேரமசந்தரம் பிரபு அவர்களுக்கு,

தங்கள் குமாரிக்கு இனியாதும் அபாயமில்லை. தாங்கள் பயப் படவேண்டாம். ஆனால் தங்கள் குமாரத்தியின் விஷயம் இரகஸ்யமாகவே யிருக்க வேண்டும். அதற்காகத் தாங்கள் தங்கள் குமாரத்தியை கோடைக்கானலிலுள்ள வசந்த பங்களாவில் சிறிது காலம் வசிக்கும்படியாக விட்டுவைக்கவேண்டும். கோடைக்கானலுக்கு இரவு 12-மணி வண்டிக்குப் புறப்பட்டுப் போனால் நலம், தாங்கள் போவதும் வருவதும் ஒருவருக்கும் தெரியக்கூடாது. இரகஸ்மாகவே யிருக்கட்டும், மற்ற விஷயம் பின்னால் விளக்குகிறேன், நான் மேல் கூறியவை ஞாபகத்திலிருக்கட்டும்.

இப்படிக்கு,

ராமலிங்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/12&oldid=1155882" இலிருந்து மீள்விக்கப்பட்டது