பக்கம்:இரத்தினமாலை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

இதைப் படித்ததும் சோமசுந்தரம் பிரபுவுக்கு ஒருவித உணர்ச்சி தோன்றிற்று. உடனே சித்திக்கலானார்: “இந்த ராமலிங்கம் யார் ? இது சேரபரியந்தம் நமது குமாரத்திக்கு சிகிச்சை செய்தவர் நமது ஜில்லாவின் தலைமை வைத்தியசாலையின் பிரதம வைத்தியரும் சுகாதார அதிகாரியுமன்றோ ? அப்படியிருக்க இந்த கடிதம் கொடுத்தது ஜில்லா பிரதம வைத்தியரா? அல்லது ராமலிங்கமா? அப்படியானால் இவ்விருவரில் இந்த ராமலிங்கம் யார்?” என்று சிந்தித்தார் இவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை.

சிறிது நேரத்திற்கெல்லாம் கடியாரத்தில் மணி பத்து அடித்தது. பாபாப்புடன் பிரபு சோமாந்தரம் எழுந்து தனதுவாசகசாலைக் குட்சென்று மேஜையின் மேலிருந்த ஒருசிறு புத்தகத்தை பொத்துப் பக்கம் பக்கமாய் திருப்பிப் பார்த்தார்.

“இரவு பனிரெண்டுக்கு ஒருவண்டி மதுரையிலிருந்து திருச்சினாப்பள்ளிவரையில் போகிறது. அந்த வண்டிதான் சரி” யென்று சொல்லிக்கொண்டே தன் தமக்கையைக் கூப்பிட்டார்.

அந்தம்மையார் தம்பி ஏனோ கூப்பிடுகிறான் என்று எண்ணிக் கொண்டே வந்தாள். அவளுக்கு இரத்னமாலையின் விஷயம் ஒன்றுமே தெரியாது. தம்பியின் முன் வந்து நின்றாள்.

பிரபு அவளைப்பார்த்து அக்கா நமது இரத்னமாலையை யழைத்துக்கொண்டு நீ கோடைக்கானலுக்குச் சென்று சில காலம் நமது வசந்த பங்களாவில் வகிக்கவேண்டும்" என்றார்.

“தம்பி! சோமசுந்தரம்! என்ன இருந்தாப்போல் நினைத்துக் கொண்டு கோடைக்கானலுக்குப் போகச் சொல்லுகிறாயே” என்றாள்

“இல்லை இல்லை அதிக அவஸ்யமான காரியம் அதாவது நம் குழந்தை இரத்னமாலைக்கு திடீரென்று உடம்புக்கு அசௌக்ய மேற்பட்டு விட்டது வைத்தியர் உடனே இக்குழந்தையை இடம் மாற் வேண்டும் இல்லாவிட்டால் அபாயமேற்படும்” என்று கூறினார் என்றான்.

“தம்பி! எனக்கு ஏன் தெரிவிக்க வில்லை”

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/13&oldid=1156032" இலிருந்து மீள்விக்கப்பட்டது