பக்கம்:இரத்தினமாலை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

________________

"அந்த சமயம் வைத்தியரைத் தேடுவதிலும் வைத்தியம் புரிவதிலும் இருந்ததனாலும் மனம் நிலைதடுமாறி யிருந்ததனாலுமேதான்" என்றார். உடனே பிரயாணத்திற்கு வேண்டியவைகள் தயாரிக்கப்பட்டது பிரபுவின் தமக்கைமீனாகரியும், இரத்ன மாலையும் பிரபு சோமசுந் தாமும் வீதியில்நின் றிருந்தமோட்டாரில்யேறினார்கள். வண்டிஸ்டேஷனுக்குச் சென்றதும் பிரபு இரண்டு முதல் வகுப்பு டிக்கெட் பெற்றுக்கொண்டு வந்து குமாரத்தியையும் தமக்கையையும் வண்டியிலேற்றி விட்டுத் திரும்பினார். அத்தியாயம் 3. அங்கயற்கண்ணியும் அச்சுதனும், இரத்ன மாலையின் கொலை நடந்து ஒரு பக்ஷத்திற்கு மேலாகியும் ஒருவிஷயமும் தெரியவில்லை மதுரையில் வெளியாகும் தென்னிந்திய மித்திரன் பத்திரிகையில் இரத்தின மாலையின் கொலையைப்பற்றிய விஷயங்களே பிரசரிக்கப்படுகின்றன மதுரை வாசிகளும் கொலையின் முடிவை யறியவேண்டிய ஆவலுடையவர்களாகவே இருக்கின் றனர். மதுரை நகரத்துச் சுவர்களிலெல்லாம் பெரிய பெரிய பிரசுரங்கள் ஒட்டப் பட்டிருக்கின்றன. அவை:- பிரபு சோமசுந்தரம் அவர்களின் ஏக புத்ரியாகிய இரத்ன மாலையைக் கொன்ற கொலையாளியைக்கண்டு பிடிப்பவர்களுக்கு ரூபாய் 50,000 மும், தங்கப் பதக்கமும் இஞமளிக் கப்படும். இப்படிக்கு ஜூலை 15 ஜில்லா போலீஸ் சூபரின் டெண்ட் ஜனங்கள் பிரதிதினம் இதே விஷயத்னத அங்கங்கே இருவர் மூவர்களாகக் கூடிக் கூடிப் பேசுவதே தொழிலாக பிருந்தனர். ஆனால் நாளாக நாளாக இதெல்லாம் பறந்து போயிற்று இரத்னமாலையின் கொலையைப் பற்றிய விஷயம் பேசுவது நின்றே போயிற்று. அப்பறி யும் இராஜரத்னம் மதுரையில் தேடாத இடமே யில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/14&oldid=1498274" இலிருந்து மீள்விக்கப்பட்டது