பக்கம்:இரத்தினமாலை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


ஒரு மாள் ராஜ்ரத்னம் வடக்கு மாசி வீதியில் இருபத்திரெண் டாம் செம்பருள்ள தனது சொந்தமாளிகையில் உட்கார்ந்திருக்கும் சமயம் ஒருசிறுவன் கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுச்சென்றான். அதில் கீழ்கண்டவாறு வரையப்பட்டிருந்தது.

"மிஸ்டர் ராஜரத்னம் அவர்கள்,
துப்பறியும் உத்தியோகஸ்தர்'
மதுரை


அன்பின்மிக்க ஐயா! உடனே தாங்கள் புறப்பட்டு நமது பங்களாவு குவாவேண்டும் தங்களிடத்தில் சில விஷயங்கள் பேச வேண்டிய அவஸ்யம் ஏற்பட்ட டிருக்கிறது. அவசரமான வியம் உடனே புறப்பட்டு வரவும்,
இப்படிக்கு,
ஷண்முகம் செட்டியார்
.


இக்கடி தம் கையில் கிட்டியதும் நமது துப்பறியும் ஆசாமி உடன புறப்பட்டு செட்டியார் பாக்டரியை நோக்கிச் சென்றார்.

ஷண்முகம் செட்டியார் முன் சென்னையிலிருந்து வந்தார். ஏதோ காரணத்தால் சென்னையை விட்டு மதுரைக்கு வந்து அங்கு அநேக இயந்திரங்களை வாவழைத்து அதன் மூலமாய் பித்தளை வெண் கலம் அலுமினியம் செம்பு முதலிய உலோக வகைகளைக்கொண்டு பாத்திரங்களைச் செய்து வெளிநாடு உள் நாடுகளுக்கனுப்பி வந்தார். அதில் ஏராளமான லாபம் கிடைக்கவே மதுரையில் வண்டியூர்போகும் சாலையில் ஓர் பெரிய பங்களாவும் தொழிற்சாலையும் ஏற்படுத்திக் கொண்டு நடத்தி வந்தார்.

ஈமது நப்பாளியான ராஜரத்னம் சீட்டைக்கண்டதும் உடனே புறப்பட்டு மெத்தை விட்டு வீதிக்கு வந்து எதிரில் நின்றிருக்கும் தன் மோட்டார் சைகிலில் ஏறிக்கொண்டு செட்டியார் பங்களாவை நோக்கிப் புறப்பட்டுப் போனார்.

மதுரை மீனாவியம்மன் ஆலயத்திற்கு மாலை 7-மணி சுமாருக்கு ஒரு பெண்மணி மிகவும் ஒயிலுடன் வெள்ளை வஸ்திரம் அணிந்து கொண்டும், வைரப் பணிகள் பூண்டு கொண்டும் பிரவேசித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/15&oldid=1539977" இலிருந்து மீள்விக்கப்பட்டது