பக்கம்:இரத்தினமாலை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

________________

அவன் பின்னால் ஓர் வேலைக்காரன் கையில் பூக்குடல் எடுத்துக்கொண்டு பின் தொடர்ந்து போனான், சேசே யிருவரும் அம்பிகையின் ஆலயத்துள் புகுந்து அர்ச்சகரி டம் பழம், தேங்காய், கற்பூரம், புஷ்பம் முதலியவைகளைக் கொடுத்து, விட்டு இருவரும் நின்றனர். அர்ச்சகர் அம்பிகைக்கு கற்பூரம் ஆரத்தி செய்த அம்பிகைப்பிரசா தங் கொண்டு வந்து கொடுத்தார். அதையிருகைளினாலும் பெற்றுக் கொண்டாள் வனிதை. அச்சமயம் தவறி விழுந்தது தேங்காய் முடி அப்பொழுதே வனிதைக்கு அரைமன தாயிற்று. விழுந்ததையெடுத் துக்கொண்டு இருவரும் வேளியே வந்தனர். வனிதாமணி தன்னுடன் வந்த ஆளை நோக்கி, 'அச்சுதா! இன்று அசுபமான சகுனம் ஏற்பட்டதே இது என் மனதை மிகவும் வாட்டுகின்றதே" என்றாள், அங்கயற்கண்ணம்மா! நீங்கள் ஏன் வருந்து கின்றீர்கள் ? என்ன அபசகுனம் ஏற்பட்டது." அச்சுதா! கவனிக்கவேயில்லையா? தான் அம்பிகை மீனாக்ஷியின் சிங்காரத்தையும், அடுத்தாப்போல ஒருவர் கோத்திராஷ்டகம் பாடிக்கொண்டிருக்க கவனித்துக்கொண்டி குந்தேன் " இவ்வளவு தானா உன்னுடைய புத்தி, “ ஏனம்மா! அப்படி சொல்கிறீர்கள் ? " என்றான் அச்சு தன். இச்சமயம் இவர்கள் பின்னால் சந்தசைவ பண்டிதர், ஒருவர் கழுத்தில் கௌரி சக்கரம் தரித்து வீபூதியைக் கட்டுகட்டாய்ப் பூசிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஜபம் செய்து கொண்டிரு த்தார். இதை அங்கயற் கண்ணி கவனிக்கவே யில்லை. அவ்விடத் தில் சிறிது நேரம் உட்கார்ந்து போவோம் என்று சொல்லி யுட்கார்க் தாள் அங்கயற்கண்ணி, அச்சுதனும் எதிரில் வர உட்கார்ந்தான். அச்சுதா! இன்னும் நகர்ந்து வா என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/16&oldid=1278610" இலிருந்து மீள்விக்கப்பட்டது