பக்கம்:இரத்தினமாலை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

________________

15 " ஆமாம் அது நடந்து தான் கிட்ட தட்ட ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சுதே. அதற்கும் இப்போ நடத்த அபசகுனத்துக்கும் என்ன அம்மா சம்மந்தம் " என்றான் அச்சுதன், அச்சுதா ! நம்மசெட்டியாருக்கு இதைப்பற்றி ஏதாவது கெ தொடக்குமோ என்று பயப்படுகிறேன். போங்கம்மா இதனாலே ஒரு கெடுதியும் நடக்காது" " என்ன அச்சுதா இவ்வளவு துணிவாய்க்கூறுகிறாய்" 4 பெரிய பிரபு அதுவுமல்லாமல் பெரிய தொழிற்சாலையின் அதி காரி. அதிலும் சொந்தக்காரர். இவர் மீது குற்றம் சுமத்த யாருக் குத்தைரியம் வரும் " என்று கூறினான் அச்சுதன், " அச்சுதா ! அப்படிச்சொல்லாதே. நமது நகரில் துப்பறிவதில் நிபுணனான இராஜரத்தினம் என்பவன் துப்புத் துலக்க வழிதேடிக் கொண்டிருக்கிறானாம், இதையெல்லாம் கேட்ட என் மனம் துடி துடித்துக்கொண்டேயிருந்தது இதுவெல்லாம் ஒழிந்து சுகம் கொடுப் பாள் மீனாட்சியென்று மனோதைரியங்கொண்டு இக்குவந்தேன் வந்த இடத்தில் அபசகுனம் ஏற்பட்டதே யென்ற திகில் அதிகமாயிருக் கிறது. " என்று கூறிக்கொண்டே கண்ணிர் வடித்தாள். அம்மா ! இது என்ன ஸபத்தியக்காரத்தன மாயிருக்கிறதே, நீங்கள் விசனப்படாதீர்கள் - துப்பு துலக்க ராஜரத்தினத்தால் ஒரு காலும் முடியாது . ' என்றான் அச்சுதன். இம்மொழிகேட்டதும் அங்கயற்கண்ணி அச்சு தனை நோக்கி கூறு கிறாள், அச்சுதா ! ராஜரத்தினம் மதுரையில் மிக்க பிரக்கியாதிபெற் திருக்கின்றானென்று கேள்விப்படுகிறேனே ? என்றாள். அதெல்லாம் வெறும் பேச்சு. - என்னவோ கூறுவதை பார்த்தால் எனக்கு மிகவும் ஆச சரியமாகவேயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/19&oldid=1278613" இலிருந்து மீள்விக்கப்பட்டது