பக்கம்:இரத்தினமாலை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

என்ன அம்மா ? ஆச்சரியமென்கிறீர்களே! நான் சென்னையி விருக்கும் போது லட்சுமியின் கொலைக்கேஸ் கடந்தது. அந்தசம யம் இந்த ராஜாத்தினம் அங்கேயும் இதே தொழில் நடத்திக்கொண் டிருந்தார். இவரையும் இவரினும் மிகுந்த சாமர்த்தியசாலியான ராம லிங்கமென்பவரையும், இன்னும் சிலரையும் துப்புலக்கும்படி கூறியதில் தனித்தனி இருவரும் ஒரே விஷயத்தைப்பற்றி துப்பறியப் பிரயத்த னப்பட்டுப் பலவித தந்திரசாமார்த்தியங்களை புசித்தும் துப்புத் துலன் காமையால் இராஜாத்னம் இந்தகேசைக்கண்டு பிடிப்பதென்பது கஷ்டமெனக்கண்டு, சென்னையை விட்டு ஜன்மதேசம் போகவேண் டிய அவசரம்ஏற்பட்டதென்றும், அதுவரையில் தான் இதைகிறுத்தி வைப்பதாயும் கூறிவிட்டு வந்தவர் மாதம் மூன்றக்கு மேலாகியும் இன் னும் கண்டுபிடிக்கமாட்டாமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்றான் இவனாவது இந்த சிக்கலானருஜவற்ற கேஸைக் கண்டுபிடிக்கப்போ கிறான். போங்கள மமா உங்களுக்குப் பைத்தியமா? அது தான் இப்படி பயப்படுகிறீர்கள், என்று நீண்டவார்த்தைகோர்வைகளினால் அங்கையற்கண்ணியின் செவிகளை நிரப்பினான். இம்மொழிகளைக் கேட்ட அங்கையற்கண்ணிக்கு அந்தசமயம் ஆறுதலாகவேயிருந்தது. அதேசமயத்தில் அங்குமாட்டப்பட்டிருந்த பெரிய கெடியாரத்தில் மணி எட்டு அடித்தது. அச்சுதனும் அங்கையற்கண்ணியும் விட்டிற்கு போகப் புறப்பட் டார்கள். அதேசமயம் இவர்கள் பின்புறமிருந்து சிரவணம் பண்ணிக் கொண்டிருந்த சைவபண்டி தரும் இவர்களைப் பின் தொடர்ந்தார். இவர்களிருவரும் ஆலயத்தின் வெளியே வந்ததும் நின்றுக்கொண் டிருந்த மோட்டார் வண்டியில் எறினார்கள். உடனே மோட்டாரும் கிழக்கு நோக்கிச் சென்றதும் பின் தொடர்ந்தசைலபண்டி தரும் மோட் டார் வண்டியின் கெம்பரைப் பார்த்துக்கொண்டு தன் வழியே திரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/20&oldid=1278614" இலிருந்து மீள்விக்கப்பட்டது