பக்கம்:இரத்தினமாலை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


கதவு திறக்கப்பட்டதும் ஒரு கூலிக்காரன் கைப்பெட்டி யொன்றை பெடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். செட்டியார் அவனை நோக்கி நீ எங்கிருந்து வந்தாய்! என்று கேட்டார். கலி:- ஐயா! அனுப்பினாங்கோ. செட்டியார் - எந்த ஐயா அனுப்பினது. கூலி:-- அவருதானுக்கோ பிரபு ஐயா ! செட்டியார் - எந்தப்பிரபு? உலகத்தில் எத்தனையோ பிரபுக் களோயிருக்கிறார்கள், அதிலும் மதுரையிலோ கணக்கு வழக்கில்கள் எத்தபிரபுவென்று நான் தெரிந்துகொள்ளுகிறது ? கடிதம் ஏதேனும் கொடுத்தாரா? கூ.3:- ஆமாங்கோ ஒரு கடுதாசி குடுத்தாங்கோ ஐயா ! ஷ. செட்டியார்:--கடிதத்தைக்கொடு என்றதும் கூலிக்காரன் மடியிலிருந்து ஒருகடிதத்தை எடுத்து கொடுத்தான். அதைப்பிரித்து வாசித்து பார்த்தார் செட்டியார். அதில் கீழ்கண்டவாறு எழுதி விருந்தது. . "ஷண்முகஞ்செட்டியார் அவர்கள், மெடல் பாக்டரி, மதுரை, ஐயா! இக்கடிதம் கொண்டுவருபவன்வசம் ஒரு பெட்டியனுப்பியிருக் கிறேன். அது போல் 500 பெட்டிகள் வேண்டியிருப்பதால் பெட் டிக்குக்கிரயம் என்னவாகுமென்றும் 500 பெட்டிகள் எத்தனை நாளில் கொடுக்கமுடியுமென்றும் ஒரு ஜாபிதா தயாரித்து அனுப்பவேண்டும் மாய் கோருகிறேன். இப்படிக்கு பிரபு சோமசுந்தரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/25&oldid=1278620" இலிருந்து மீள்விக்கப்பட்டது