பக்கம்:இரத்தினமாலை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


முள், இ.தவும் செட்டியாருக்கு தெரியாது, ஆனால் லக்ஷமி விவு யத்தில் கொஞ்சம் சந்தேகமிருக்கிறது இருக்கட்டும். சவுரிமுத்து யார் என்பதையும் தெரிந்துக்கொண்டோம். சதபதி யார் என்பது மட்டும் விளங்கவில்லை. போகப்போக விளங்கும். பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டே ராஜரத்தினத்தை பின் தொடர்ந்தான். ராஜாத்தினம் சத்து சந்தாக நுழைந்து ஒரு வீட்டு வாசலின் முன் சென்று சுற்றுமுற்றும் யாரேனும் நடமாடுகிறார்களாவென்று பார்த்து விட்டு மெள்ள கதவை தட்டவே, உள்ளேயிருந்து யோரது?" என்ற சத்தம் பிறந்ததும் "தான் தான் ரகுபதி' என்றான் ராஜரத்தினம். ராமலிங்கத்திற்கு ஆச்சரியமாயிருந்தது. ரகுபதியென்றதும் கதவு திறக்கப்பட்டதும் உள்ளே சென்று கதவைத்தாளிட்டுக்கொண்டு விட் டார்கள். சிறிது நேரம் வரையில் யாதொருசந்தடியும் காணவில்லை. இந்த சம்பவங்களைக்கண்ட ராமலிங்கத்திற்கு மிக்க ஆச்சரியமும் திக லும் ஏற்பட்டது. ராசரத்தினமே ரகுபதியென்பவன். சவுரிமுத்து வே சண்முகஞ்செட்டி. இவன் இதற்குள் என் சென்றான் ? இதில் யார் வசிக்கின்றார்கள் இவனுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணிக்கொண்டே இதை முடிவுவரை பார்க்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான். ராமலிங்கம் சமயத்திற்கேற்ற வேஷம் போடுவதில் நிபுணன். இவனை ஒருநாளைக்கு நாறுமுறை நறுவிதமாக பார்க்கலாம். எந்த வேடித்திலிருந்தாலும் அதற்கேற்ற கடை கொடி பாவனைகளை மறக்க வேமாட்டான். இவ்வளவு சாமார்த்தியமுடையவ னாதலால் அச்சம் வம் தான் ஒரு பண்டார வேடத்திலிருந்ததனாலும், தான் அப்பொழு தேயலுத்து வந்தவன் போல் சாசரத்தினம் சென்ற வீட்டு திண்ணையின் மீது சன்னல் புறம் போய்படுத்தான். அதேசமயம் சவரிமுத்து * காலஹாணம் செய்வதால் நம்மிருவருக்கும் ஆபத்துண்டாகும் உட னே என் கணக்கை பைசல் செய்து விடு " என்று கோபத்துடன் கூறி னான் ரகுபதி, சி!சீ! போ மூண்டமே! நீ கேட்டபோதெல்லாம் பணம் கொ டுக்க இங்கென்ன கொட்டியா வைத்திருக்கிறது? எப்போ பார்த்தா லும் கணக்கு கணக்கு என் கிமுயே. உனக்கென்ன மோ இன்றைக்கு. அஷ்டமத்து சனி போலிருக்கிறது. போ, போ, என்று சவுரி முத்து கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/33&oldid=1278628" இலிருந்து மீள்விக்கப்பட்டது