பக்கம்:இரத்தினமாலை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

________________

டானே ? ஒரு சமயம் ராமலிங்கமாயிருக்குமா ? ஆனால் இவனை இப் பொழுதே ஒழித்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டே மெ ல்ல தன் கை துப்பாக்கியை யெடுத்து சாமலிங்கத்தின் முகத்திற்குதே சே நீட்டி யாராயிருந்தாலும் சரி, இப்போதே உனக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்கக் கூடாது. நான் கேட்பவைகளுக்கு பதில் உடனுக்குடன் கூறிவிடு, எட்ட நில்" என்று சொல்லிக்கொண்டே தன் கைத்துப்பாக்கியை பவன் முகத்துக்கு நேரே நீட்டினான். சிங்கத்தின் வலிமையைப்போன்ற தோதாருட்பவானன நமது ராமலிங்கம் இவன் சொல்வதை கவனியாத குடியனைப்போலவே பி கவித்துக்கொண்டே யவனது துப்பாக்கியைத் தட்டி விட்டான். அது ராசரத்தினத்தின் கையிலிருந்து விடுபட்டதும் ஆகாயத்தை நோக்கிச்சென்று மீண்டும் பூமியைநோக்கி விழுந்ததும் அதினின்றும் சப்தமுண்டாயிற்று. பார்த்தான் ராமலிங்கம். இனி இங்கிருந்தால் மோசம். போலிசார்வந்து விடுவார்கள். விஷயம் கெட்டுப் போகு மென்றெண்ணி படுத்தாப்போ லுள்ள சந்துவழியே போய்விட்டான். ராசரத்தின மோ ஒன்றும் தோற்றாமல் விழித்துக்கொண்டிருக் கையில் போலீஸ்காரர்களும் வேறு சனங்களும் வந்து நின் திருக்கிற வனே முன்பின் பாராமல் அடித்து விட்டனர். இதற்குள் ராந்தல் வெளிச்சம் வர எல்லாரும் சற்று விலகவே போலீஸ் எட்கான்ஸ் டேயில் பார்த்து யார்? என்று கேட்டார். அதற்குள் ராசரத்தினம் மறுமொழியொன்றும் சொல்லாமல் தன் சட்டைப்பைக்குள்ளிருந்த ஒரு தங்கப்பதக்கத்தைக்காட்டினான். ஓ! ஹோ ! அப்பறிபவரா ? துப்பாக்கி சப்தம் கேட்டதே! என்ன விசேஷம் என்றான். தவறு தலாய் விட்டது. அதன் பயன் அவமான மேயன்றி வேறில்லை. இதையும் சும்மாவிடுவதில்லை என்று சொல்லிக்கொண் டே போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/35&oldid=1278644" இலிருந்து மீள்விக்கப்பட்டது