பக்கம்:இரத்தினமாலை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

________________

32 அத்தியாயம்-7. சவுரிமுத்தும் ரகுபதியும். மேற்கண்ட சம்பவங்கள் நடந்து நாள். சில கடந்து போயிற்று, கிணற்றில் கல் போட்டது போல் இருக்கிறது. கோடைக்கானலில் பகல் பன்னிரண்டுமணி இருக்கும். அந்த நேரத்தில் ஓர் வைத்தியர் வசந்த பங்களாவுக்குள் நுழைந்தார். இரத்தின மாலையும் அவளது அத்தையும் ஆகிய இருவரும் இர ண்டு ஆசனங்களில் அமர்ந்து உண்டியுண்ணும் சமயம் வைத்திய ரைப் பார்த்ததும் இரத்தின மாலை எழுந்தாள். அதற்குள் அவள் அத் தை அபிராமம்மாள் தலையை நிமிர்ந்து வைத்தியர் என்று தெரிந்து கொண்டு அவரிடம் பேச எழுத்து வந்தவள், சிறிது துரிதப்படவே கால் இடறிற்று. அச்சமயம் நமது இரத்ன மாலை அத்தையை தாங்கி னாள், டாக்டரும் பிடித்துக்கொண்டார். பிறகு சிறிது சமாளித்து அபிராமியம்மாள் ஆசனத்தமர்ந்து டாக்டரையும் அமரச்செய்து க்ஷேமங்களை விசாரித்தாள். டாக்டருக்கு நோக்கமெல்லாம் இரத் தின மாலையின் மீதேயிருந்தது. இரத்ன மாலையும் தன துப்பார்வையை டாக்டர் மீதேசெலுத்தியிருந்தான். இவ்விதமிருக்க அபிராமியம்மா ளின் வார்த்தைக்குப் பதிலளிக்கச்சிறிது தாம்தப்பட்ட தெனினும் உட னுக்குடனே சரியான பதில் அளித்தான். சுறிது நேரம் கழித்து டாக்டர் இரத்னமாலயை நோக்கி இப் பொழுது தேகம் சவுக்கியம் தானே ? " என்று கேட்டபின். 4-ஆம் ? இப்பொழுது தேகம் சௌக்கியம் தான் : எனக்கு வருக்கு போகப்பிரியம். ஆனால் என் தகப்பனார் வரக்கூடாதென்று உத்தரம் எழுதி விடுகிறார். இன்னும் எத்தனை காலம் இந்த வாரி விருப்பதென்று எனக்கு கஷ்டம் தோற்றுகிறது" மிருதுவான மொ ழிகளால் கூறினாள் இரத்னமான். டாக்டர்:- ' அம்மா! சீக்கிரமே போய்விடலாம். இனி அதிக நாள் தாமதிக்கவேண்டியதில் " என்று கூறினார் டாக்டர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/36&oldid=1278643" இலிருந்து மீள்விக்கப்பட்டது