பக்கம்:இரத்தினமாலை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்முகம்

செந்தமிழ் நண்பர்காள்!

நமது நாடு தற்காலம் நவீனங்களைப்படிப்பதில் மிகுந்த சிரத்தை யுடைத்தாயிருக்கின்றதென்பது எவருமறிந்த விஷயமே. நவீனங்களிலும் மதி புகட்டக்கூடிய பல விஷயங்களுடன் பதில் தன்னகத் தடக்கிகொண்டு படிப்பவர்க்கு மதியை விருத்தி செய்து, உலகத்தின் கண் நடைபெறும் கொலை, களவு, வஞ்சனை, சூது, பொறாமை முதலியவிஷயங்களைத் தெள்ளிதின் விளக்கி, நல்லறிவு புகட்டுவதுடன் மன விசாரமடைந்தகாலத்தில் ஒருவித உற்சாகத்தையளித்த சந்தோஷத்தை யுண்டாக்கும் தன்மையிலிருப்பதுவேயாம். இவ்வித நாவலை பலரும் பலவித முறையை யநுசரித்து எழுதிவருவதை யுத்தேசித்து நம் நண்பர்கள் பலர் நம்மையும் சில நாவல்கள் எழுதி வெளியிடுமாறு வேண்டியதின் பேரில் தாமும் அதற்கிணங்கவே, இதைப் பிரசரிக்க ரஞ்சித போதினியின் பிரசுரகர்த்தாவான ஸ்ரீமான் சம்பந்த முதலியாரவர்கள் பதிப்பித்துப் பிரசுரிப்பதாய்க் கூறியதை யநுசரித்து முதல் முதலாகத் தனிப்பிரசுரமாக இரத்னமாலை அல்லது இருகொலைகளின் இரகஸ்யம் என்னும் இந்நூலை எழுதி முடித்தேன்.

தமிழ் சகோதார்களே! நான் மஹாராஷ்டிரநாட்டினனாயும், பாஷைக்கு அன்யனாயுமிருப்பதால் இதில் பல குற்றம் குறைகளிருக்கலாம். இக் குற்றங்களை நீக்கி குறைகளைப் புறக்கணித்து இந்நாலை யாதரித்து என்னையும் கௌரவிப்பீர்களெனப் பிராத்திக்கின்றனன்.

இங்ஙனம்:

தமிழ்ப்பூஷணம்

வாசுதேவ ராவ் கேய்க்வார்,

தமிழ் கல்வி யபிவிரத்தி போஷகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/4&oldid=1155692" இலிருந்து மீள்விக்கப்பட்டது