பக்கம்:இரத்தினமாலை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ

ஸ்ரீராமஜெயம்.

இரத்தினமாலை.

அல்லது

இருகொலைகளின் இரகஸ்யம்

அத்தியாயம் 1.

நாடக சாலையில் நவீன திருட்டுங் கொலையும்.

மதுரையில் ஓர்தினம் மாலை 5-மணி சுமாருக்கு நான்கு வாலிபர்கள் ஒருவரோடொருவர் சம்பாஷித்துக்கொண்டே பீமவிலாஸ் காபி ஹோட்டலுக்குள் நுழைத்தனர். அச்சமயம் நால்வரில் ஒருவன் மற்ற மூவரைப்பார்த்து “நண்பர்காள்! நாம் வரும்போது நம்மைக் கண்டு பேசிய இராமலிங்கம் பிள்ளையைக் கவனிக்காமலே வந்து விட்டோமே. இது ஒரு பெரிய தப்பிதமன்றோ ?" என்று கூறினான்.

மூவரில் ஒருவனாகிய முத்துசாமி முருகேசத்தை நோக்கி, “ஆம் உண்மையே. நானும் மறந்துபோய் விட்டேன். சென்று உடனே அழைத்துக்கொண்டு வா” என்று விரைவுடன் கூறினான்.

முருகேசன் உடனே வெளியே வந்த விக்டோரியா மிமேரியல் ஹாலை நோக்கிச் செல்லும் இராமலிங்கத்தைக் கைதட்டிக் கூப்பிட்டான். அவன் திரும்பிப்பார்த்து முருகேசனை நோக்கி வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/5&oldid=1155694" இலிருந்து மீள்விக்கப்பட்டது