பக்கம்:இரத்தினமாலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

முருகேசன் இராமலிங்கத்தின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கேரே பீமவிலாசத்துக்குள் அழைத்து மூவரும் அமர்ந்திருக்கும் மேஜையண்டை போய் உட்கார்ந்தனர். நால்வரும் எதோ பேசிக்கொண்டே யிருந்தனரெனினும் இராமலிங்கம் மட்டும் இவர்கள் ளோடு பேசிக்கொண்டே தன் எதிர்ப்புறத்துள்ள மேஜையின் முன் உட்கார்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு செட்டியார் மீதே நோக்கம் வைத்திருந்தான். இச்சமயம் ஸப்ளையர் வந்து “ஸார் என்ன கொண்டுவரட்டும்" என்றான்.

முருகேசம்:- “ஸ்வாமி! ஆளுக்கொரு பிளேட் ஜாங்கிரியும், ஒரு பிளேட் குலாப் ஜாமும், ஒரு பிளேட் பஜ்ஜியும், ஒரு கப் காபியும் கொண்டுவாரும்" என்றான்.

பிராமணன் கொண்டுவந்தவைகளை நால்வரும் உண்ண ஆரம்பித்தனர் இராமலிங்கமட்டும் "எத்தவத்தைச் செய்தாலும் எதவஸ்தைப்பட்டாலும் முக்தர்மனமிருக்கும் மோனத்தே” என்பது போல தான் மோதல்லைத்த செட்டியார் மீதே கண்ணோட்டமா யிருந்தான். இக்கால் வரும் காபியருந்தி வெளிப்பட்டார்கள். செட்டியாரும் காபிசாப்பிட்டு வெளியில் கார்த்திருந்த தனது மோட்டாரிலேறிக்கொண்டு நேரே விக்டோரியா மிமோரியல் ஹாலைநோக்கி ஒட்டச் சொல்லி வண்டியோட்டிக்கு உத்தரவிட்டார். வேகமாக மோட்டார் குறித்தவிடம் போய் நின்றது. முதல்கிளாஸ் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய் அமர்ந்தார்.

நான்கு சிநேகிதர்களும் நேரே ஹாலைநோக்கி நடந்து போய் முதல்வகுப்பு டிக்கெட்பெற்றுக்கொண்டு உள்ளே சென்று ஆசனங்களில் அமர்ந்தனர். ராமலிங்கம் மட்டும் செட்டியாரின் பின்புறத்தில் உட்கார்ந்துக்கொண்டு தனது தினசரி குறிப்புப் புத்தகத்தில் ஏதோ குறிக் கக்கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டன. எதிரிலிருந்த வெள்ளைப்பதோவில் காணப்படும் காவிகளைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள், அன்றைய தினம் விசேஷமான கூட்டம், "பிரக்கியாதிபெற்ற ஒர் திருடனின் சாமார்த்தியம் என்ற ஆங்கில நாடகம்" என்ற துண்டுப்பிரசுரத்தின் விசேஷமே அதிக கூட்டத்திற்கு காரணம், நாடகம் ஆரம்பிக்கப்படுமுன் வேடிக் சைக்காட்சிகள் காட்டப்படுவது போல முதல் காட்சி முடிந்ததும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/6&oldid=1155703" இலிருந்து மீள்விக்கப்பட்டது