பக்கம்:இரத்தினமாலை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

நாடகம் அசம்பிக்கப்பட்டது. இராமலிங்கத்தின் முன்புறம் இருந்த செட்டியார் எங்கே போனாரோ காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான், செட்டியார் ஸ்திரிகள் இருக்கும் பக்கத்தில், உட்கார்ந்திருக்கிறார். ராமலிங்கமும் தனது பார்வையை அவர்மேலேயே செலுத்தி யிருந்தான். சிறிது நேரத்துக்குள் நாடகம் முடிந்தது. ஆனால் ஒரு சப்தம் கிளம்பியது. அது எவ்விடத்திலிருந்து வந்தது என்பது சிறிது நேரத்திற்குள் விளங்கிற்று. அதாவது ஸ்திரிகளிருக்கும் பக்கத்திலிருந்து கிளம்பிற்று. "கொலை! கொலை!! கொலை!!! காயமே யில்லாத கொலை" என்று மட்டும் கிளம்பிற்று. இதற்குள் இராஜாத்தினம் என்னும் துப்பறியவர் வந்து சேர்ந்தார்.

கூட்டம் கலைந்ததெனினும் வெளியில் ஒருவரையும் செல்லவிட வில்லை. ஆனால் இச்சமயம் இன்னொரு கூச்சல் கிளம்பியது. அது “இரத்னமாலையே கொல்லப்பட்டவள், அவனது கையிலிருந்த விலை யுயர்ந்த மோதிரம் காணப்படவில்லை” யென்பதே.

இதே சமயத்தில் அங்கு காவலாயிருந்த போலீஸ்காரர்கள் டெலிபோன் மூல்யமாய் போலீஸ் இனிஸ்பெக்டரையும், சூப்பிரண் டெண்டையும் வாவழைத்தனர். காட்சிசாலை அமளிகுமளியாயிரும் தது. சிறிது நேரத்துக்குள் போலிஸ் சூப்பிரண்டெண்ட், இன்ஸ் பெக்டர், ஜில்லா மாஜிஸ்டிரேட் முதலியவர்களும், இன்னும் அநேக கான்ஸ்டேபில்களும் வந்து சேர்ந்தனர்.

காட்சி மண்டபத்துள்ளிருந்த ஜனங்களை பொல்வொருவராய் சோதித்து வெளிவிடப்பட்டது. ஆனால் ஒருவரிடத்திலும் கதை பேகப்படவேயில்லை. புருஷர்களெல்லாம் சென்றபின் ஸ்திரீகளை, ஸ்திரீகளைக்கொண்டே பரிசோதிக்கப்பட்டது. ஆனால் நகைகிடைக்கவேயில்லை.

பிரேதத்தின் அருகே ஜில்லா மாஜிஸ்டிரேட், சூப்பிரண்டெண்ட், இன்ஸ்பெக்டர், தப்பறியும் ராஜாத்தின முதலியாரவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

பிரேதபரிசோதனை செய்வதற்கு இவர்கள் ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சமயம் செட்டியார் மீதே நோக்கமாயிருந்த ராமலிங்கம் வைத்திய வேடம் பூண்டு அங்கே வந்து சேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/7&oldid=1155704" இலிருந்து மீள்விக்கப்பட்டது