பக்கம்:இரத்தினமாலை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வைத்தியர் வந்ததும் அவரை யுள்ளே அழைத்துப் போகப்பட்டது. அதே சமயம் துப்பறியும் ராஜாத்தினம் வைத்திய வேடம் பூண்டுள்ள ராமலிங்கத்தைப் பார்த்தான்.

“வைத்தியரே இந்த பிரேதத்தைப் பரிசோதித்து எவ்வித ஆயுதத்தினால் கொலை செய்யப்பட்டிருக்கிற தென்பதைக் கூறுங்கள்" என்றான்.

நமது துப்பறியும் ராமலிங்கத்தின் முன் ராஜரத்தினம் ஒன்றும், செய்ய முடியாது. ராமலிங்கம் பிரக்யாதி பெற்ற துப்பறியும் உத்தி போகஸ்தன், சென்னையில் அநேக சிக்கலான கேஸ்களையும், பிறரால் காணமுடியாத கேஸ்களையும் கண்டு பிடித்தவர். தற்காலம் மதுரையில் பிரபலமான ஒரு வியாபாரியான ஷண்முகஞ்செட்டியார் மீது மோதல் செய்து வருவதற்காகவும், சென்னையில் களவடப்பட்டு கொலை செய்யப்பட்டானென்றும் நிரூபிக்கப்பட்டுமுள்ள லக்ஷ்மிகாந்தம் என்பவளைத் தேடியும் வந்திருக்கிறார். இவர் இதே காக்ஷி மண்டபத்தில் ஒரு செட்டியார் மீது மோசூல் செய்த விஷயம் வாசகர்களின் மனதிலிருக்கு மன்றோ ?

துப்பறியும் ராஜாத்தினம் கூறியதைக்கேட்ட ராமலிங்கம் “சரி” யென்று கூறிப்பரிசோதித்துப் பார்த்து எங்கும் காயமில்லாமலிருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டுத் தனக்குள்ளேயே "என்ன. சாமர்த்தியம் குளோரபாரம் செய்த வேலையல்லவா இவ்வளவும், ஷண்முக செட்டியாரே! நீர் எவ்வளவு புத்தி சாதுர்யத்துடன் செய்தாலும் உம்மிடத்தில் ஒரு முட்டாள் தனமில்லாமலில்லை. அப்படியிருப்பதினாலேதான் துப்பறிபவர்களுக்குத் துப்பு துலங்கும் எவ்வளவு ஜாக்கிரதையோடு செய்தாலும், பயம் என்பது எத்தசைய தைரியசாலிக்கும் ஜனிக்கின்றதென்பதைக் கண்டேன் என்று எண்ணிக் கொண்டே கீழே குனிந்தார். அங்கு ஒரு மோதிரமும், ஒரு கடுதாசி உரையுமிருந்தது. இதை யொருவரும் கவனிக்கவே யில்லை யென்பதை யறிந்து நமது ராமலில்கம் இரண்டையும் பத்திரப்படுத்திக் கொண்டே இரத்ன மாலையைப் பரிசோதிப்பவர் போல நடித்து, குளோசபாரம் ஏறியதும் உண்டான விஷத்தின் வேகத்தால் கீழ் விழுந்தபோதுண்டான ஒரு சிறு காயத்தைக் காட்டி, "இப்பெண்மணி சப்தமும் புகையுமற்ற (Noiseless & Smokeless) ரிவால்வரினால் சுடப்பட்டிறந்தான்" என்று கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/8&oldid=1155708" இலிருந்து மீள்விக்கப்பட்டது