பக்கம்:இரத்தினமாலை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

துப்பறியும் இராஜாத்தினம் அதை யுண்மை யென்றெண்ணிக் கொண்டு ஏதோ சிலவற்றைத் தன் தினசரிக் குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொண்டார். ஜில்லா மாஜிஸ்டிரேட்டும் போலிஸ் சூபிரண்டெண்டும் இராஜரத்தினத்தை நோக்கி "மிஸ்டர் ராஜரத்தினம்! இதை நீர் கண்டு பிடித்து விட்டால் உமக்கு தக்க வெகுமதியளிக்கப்படும் இதோடு கூட இத்தகைய விஷயங்களை உம்மாவன்றி, வேறு எவராலும் கண்டு பிடிக்கமுடியாதென்பது திண்ணம் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கின்றீரோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையாகும்" என்று சொன்னார்.

இதே சமயம் இரத்னமாலையின் தகப்பனார் அங்கே வந்து சேர்ந்தார். ராமலிங்கம் அவரைப் பார்த்ததும் சிறிது விலகியவர் போல் அசைந்தார்.

ஜில்லா மாஜிஸ்டிரேட்டும், சூப்பிரண்டெண்டும் அவரைப் பாரத்து வந்தனம் செய்து விஷயத்தைக் கூறினர்.

இரத்ன மாலையின் தகப்பனாருக்கு முகத்தில் ஈயாடவில்லை. மௌனம் சாதித்து நின்றார். இச்சமயம் அவரைப் பார்த்து ஜில்லா மாஜிஸ்டிரேட் கூறுகிறார்.

"ஜயா ! சோமசுந்தரம் பிரபுவே ! தாங்கள் விசனப்படுவதில் இனி யென்ன பயன் ? கடந்தது நடந்து போய்விட்டது. இனி கடக்கவேண்டியதைப்பற்றி சிந்தியுங்கள். கொலையாளியைக் கண்டு பிடிக்க நமது துப்பறியும் நிபுணர் இராஜரத்தினம் ஏற்பாடு செய் யப்பட்டிருக்கிறார்" என்றார்.

பிரபு சோமசுந்தரம்:- அப்படியானால் மிக்காலமே, இக்கொலை யாளியைக் கண்டுபிடிப்பவாகளுக்கு ரூ 50,000 இனாம் அளிக்கத் தயாராய் இருக்கிறேன்" என்று கூறிவிட்டுப் பிரேதத்தின் அருகே சென்றார்.

போலீஸ் அதிகாரியும் ஜில்லா அதிகாரியும் போலீஸார்களும் துப்பறியும் சாஜரத்தினமும் போய் விட்டார்கள். ராமலிங்கம் மட்டும் இரத்ன மாலையின் அருகே யிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/9&oldid=1155710" இலிருந்து மீள்விக்கப்பட்டது