இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எண்ணக் களஞ்சியம்
தன் காதலன் முன்பாக விரிந்து பரந்த தனது முகத்திரையை விலக்கிக் கொள்கிறது உலகம். அது அழிவற்ற ஒரு முத்தம் போல, ஒரு பாட்டைப் போன்று சிறியதாக ஆகிவிடுகிறது. - ப.ப
★★★★
ஒளியின் குழந்தைகளே மாந்தர்கள். தங்களைத் தாங்களே நன்கு அறியும் பொழுது, தாங்கள் அழியாநிலை பெற்றவர்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள். - ஆ
★★★★
அமைதியாகிய கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் மாறி மாறி எழும் நுரைபோன்றது உலகம். - மி.மி
★★★★
முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே குழந்தைகள் கூடுகின்றன. - வ.பி
★★★★