பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

105


முகில்களின் எதிர்ப்பினூடே வண்ணக்கோலங்களாகிற தன் களஞ்சியத்தை வெளிச்சம் அடைகிறது.

-மின்

மது வளமையிலிருந்து வாரி வாரி வழங்குவதன் மூலமே நம்மிடமுள்ளது எல்லையற்றது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

-ஆ

நான் என்றுமே தேவைப்படுகிறவன் என்பது நான் இன்னமும் இருக்கிறேன் என்பதிலேயே மெய்ப்பிக்கப்படுகிறது.

-எ.எ

ழை ஓய்ந்தபின் நனைந்திருக்கும் மரம் பளபளப்பது போல் என் நெஞ்சம், கண்ணீர் சொரிந்துள்ள முந்தைய இரவை நோக்கி இன்று புன்னகை புரிகிறது.

-மின்

ங்களை வாழவிடு. பாவலன் தனது பாடல்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது அடையும் மகிழ்ச்சியைப்போன்றதொரு மகிழ்ச்சியை வாழ்க்கையில் நாமும் பெறுவோமாக.

-ஆ

நெஞ்சத்தின் பார்வையில் தூரம் மலைப்பைத் தருகிறது.

-ப.ப