106
இரவீந்தரநாத் தாகூர் - எண்ணக் களஞ்சியம்
எனது வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்ததற்காகப் பயன் மரங்களுக்கு நான் நன்றி தெரிவித்திருக்கிறேன். அதே நேரத்தில், மரங்களை என்றும் பசுமை மாறாமல் வைத்திருக்கிற புல்வெளியை நினைவில் நிறுத்திடத் தவறி விட்டேனே.
மின்
★★★★
தனக்கு இணையில்லை என்ற நிலையை ஒருவனது வெறுமை குறிக்கிறது. அதன் மறு பகுதி உண்மை நிலையை உணர்த்துகிறது.
-ப.ப
★★★★
மனித சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளும் ஒருங்கிணைந்திருக்கின்றன என்பதுதான் இன்றைய மிகப் பெரிய உண்மை. நமது சிறந்த பண்பாட்டின் மூலம் இந்தச் சிக்கலைத் தீர்த்து நமது மாந்தத்தன்மையை மெய்ப்பித்துக் காட்டவேண்டும்.
-தே
★★★★
அனைத்திலும் நிறைந்திருக்கும் துயரத்தினூடே என்றும் நிலைத்திருக்கும் அன்னையின் மெல்லிய குரலைக் கேட்கிறேன்.
-ப.ப
★★★★
அன்பே, என்னை நீ காதலிக்க முடியாவிட்டால் குறையில்லை, எனது துன்பத்தை மன்னித்துவிடு. எட்டி