த. கோவேந்தன்
107
நின்று என்னை வெறுக்கும் வகையில் பார்க்காதே. நான் எனது மூலைக்கு ஒதுங்கி, இருட்டில் அமர்ந்திடுவேன்.
-தோ
★★★★
யாரோ ஒருவன் என் நெஞ்சத்தைத் திருடிவிட்டான்; வானின் பரந்த வெளியில் அதை உதிர்த்துவிட்டான்.
-எ
★★★★
இருட்டில் ஒரு குழந்தை நான். இருட்டின் மறைவில் கைகளைக் துழாவி உன்னைத் தேடுகிறேன்,தாயே.
-ப.ப
★★★★
நேயத்தில் விழித்தெழுவது என்பது இனிமை நிரம்பிய உலகத்தில் கண்விழிப்பதில்லை. சிறப்பின் மூலம் நிலைப் பேற்றையடைந்து துன்பத்தில் இன்பம் காணும் கடும் முயற்சியில் உலகங்கள் கண் விழிப்பதேயாகும் அது.
-எ.எ
★★★★
என் உடன்பிறப்புகளே, உங்களது ஆற்றல் வாய்ந்த மாந்தர்களின் முன்பு எளிமையில் நின்றிட வெட்கப் படாதீர்கள்.
-தே
★★★★
உன் குழந்தைகளிடம் உன் பெருமையை வெளிப்படுத்தும் தந்தையே, உன்னை நான்; நாணுறச் செய்யக் கூடாது.
- ப.ப
★★★★