பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

109


வனின் அரியணையை எழுப்பிடு. மலைபோன்றதெல்லாம் உயர்ந்ததுவுமில்லை, செருக்கு எனைறென்றும் நிலைத்திருப்பதுவுமில்லை என்பதையும் நீ உணர்ந்து கொள். -தே

னது பாடல்களினூடே உனது வழிகளின் அடையாளங்களை, சகடம் கட்டித் திரியும் நாடோடியே, நீ கண்டிடுவாய். ப.ப.

டும் நோவுற்றுக் கொண்டிருக்கும் இறைவனின் புதல்வியே, அமைதியின் உருவே, வருக வருக. -தே

ழகு என்பது எங்கும் நிறைந்தது. ஆகவே ஒவ்வொன்றுமே நமக்கு மகிழ்ச்சி தரும் ஆற்றல் பெற்றது. -சா

லகின் நெஞ்சத்துடிப்பை போன்று, முழு நிலவே, இவ்வளவு பனைவோலைகளிடையே ஒரு சலசலப்பு தோன்றுகிறது; கடலில் கொந்தளிப்பு ஏற்படுகிறது. இனம் தெரியாத எந்த வானிலிருந்து உனது அமைதியிலே நேயத்தின் துன்புறுத்தும் கமுக்கத்தைப் பதுக்கி வைத்திருக்கிறாய்? -ப.ப