இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
110
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
அகம்பாவம், தனது கர்வக் குறிகளைக் கல்லிலே பொறிக்கின்றது; அன்போ, மனப்பூர்வமாக மலர்களையே தந்து சரணாகதியடைகிறது.
-மி.மி
★★★★
கிழக்குத் திசையின் அமைதியான, பணிவான பொறுமையான இருட்டின் பின் காலைப்பொழுது விடியக் காத்திருக்கிறது.
-தே
★★★★
என் வாழ்நாளில் எத்தனையோ இன்ப நாள்கள் வந்து போயிருக்கிறன்றன. மகிழ்ச்சி வாணர்களுடன் நான் எத்தனையோ இரவுகள் விழாக்கொண்டாடி மகிழ்ந்திருக்கிறேன்.
★★★★
நான் எங்குப் பிறக்கப்போகிறேனோ, ஒளி நிரம்பிய அந்தத் தீவை, விண்மீனை என் கண்முன் காண்கிறேன். ஒய்வுப் பொழுதின், விளைந்திடும் ஆழத்தில் என் வாழ்க்கை தன் பணியைத் தொடங்குகிறது.
- ப.ப.
★★★★
குருட்டுப் பாம்பு இருட்டுக் குழியில் இருக்கிறது. அது தன் தலையில் உள்ள மணி ஒளியையும் அறியாது, பரிதியின் ஒளியையும் அறியாது.
-கீ
★★★★