இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
111
முகத்திரை அணிந்த மணப்பெண்தான் இருட்டு போக்குக் காட்டும் ஒளி தன் நெஞ்சத்திற்குத் திரும்பிட அமைதியாகக் காத்திருக்கிறது அது.
-மின்
★★★★
எந்த வாயில் வழியாகத் திரும்பிச்செல்ல வேண்டுமோ அதுவே அடைக்கப்பட்டிருக்கும்போது, மகிழ்ச்சி துன்பமாக மாறுகிறது. -சித்
★★★★
மேலுலகின் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, நங்கூரம் வெறியுடன் சேற்றினை அணைத்துக் கொள்கிறது. எனது படகு விலங்குடன் உராய்கிறது.
-மின்
★★★★
எவனொருவன் இறைவனைக் கண்டும் தொட்டும் இருக்கிறனோ அவன் எல்லா அச்சத்திலிருந்தும் அவலத்தினிடமிருந்தும் விடுபடுகிறான்.
- க.பா.
★★★★
இகழப்பட்ட மாந்தன் வெற்றிக்காக மாந்த வரலாறு பொறுமையாகக் காத்திருக்கிறது.
-ப.ப.
★★★★
புனிதமான செங்கதிர் இதயத்திற்காகப் படையல் பொருள்களைக் கொண்டு வா.
-தே
★★★★