இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உனது நெஞ்சில் உள்ள கமுக்கத்தை என்னிடமே சொல்லிவிடு தோழி!
நீ இவ்வளவு அருமையாகப் புன்முறுவல் பூத்து நிற்கின்றாய்.
உனது நெஞ்சக் கழுக்கத்தை, என்னிடமே சொல்லிவிடு, தயங்கவே தயங்காதே; என் நெஞ்சமே அதைக் கேட்கும், என் காது கேட்காது.
இரவு இருண்டு ஆழமாக இருக்கிறது; வீடு அமைதியாகவே இருக்கிறது; பறவைகளின் கூடுகளிலும் உறக்கம் மண்டிக்கிடக்கிறது.
உனது தயங்கும் கண்ணீர்த்துளிகளின் மூலமும், தயங்கும் புன்முறுவல்களின் மூலமும், இனிய நாணம் நிறைந்த துன்பத்தின் மூலமும், உனது நெஞ்சக் கமுக்கத்தை என்னிடம் பேசித்தீர்த்துவிடு.
-எ