இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
115
மாலைப் பொழுதாகிற கிண்ணம் அன்பினாலும் இசையினாலும் பொங்கி வழிகிறது. அந்நேரம் நான் யாருடனோ அமர்ந்திருந்தேன். அவனுடைய நினைவு முகத்தையும் விண்மீனில் காண்கிறேன்.
一ஈ
★★★★
மண்ணில் கண்ணீர்த் துளிகளே அவளுடைய புன் முறுவல்களை மலர்ச்சியில் வைத்திருக்கின்றன.
-ப.ப.
★★★★
என் இறைவனை நான் காணும்போது தீமைகள் யாவும் என் நெஞ்சத்திலிருந்து அகன்று விடுகின்றன. -க.பா
★★★★
கண்ணுக்குப் புலப்படாத சில விரல்கள் பயனற்ற தென்றல் போல, நீர்க்குமிழிகளின் இசையை என் நெஞ்சத்தில் பரப்பி வழித்துக் கொண்டிருக்கின்றன. -
ப.ப.
★★★★
உண்மையின் எளிமையை எதிரொலிக்கும் உன்னை நான் தேடியலைகிறேன்.
-சித்
★★★★
காலம் காலமாக அவன் எனக்காகக் காத்திருக்கிறான்.காரணம் என் அன்பிற்காக அவன் தன் நெஞ்சத்தைத் தொலைத்திருக்கிறான்.
一க.பா.
★★★★