இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
117
எண்ணியதை அடைந்திடுவேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து காத்திருந்து உன் வாழ்நாளைக் கழித்துவிடு.
-சித்
★★★★
கண்டறியாத வழிகளில் பறந்து திரியும் இறங்கும் பறவைகள் போல என்னையும் உரிமையுடன் பறக்கவிடு.
–எ
★★★★
கடவுளை நீ கண்டிருந்தால் உன்னை முழுமையாக அவனிடம் அளித்துவிடு. உன்னிடம் அவனைக் கொணர்ந்திடு.
-க.பா.
அழகே உண்மை உண்மையே அழகு என்பதை என்றும் உணர்ந்திருப்பதே நமது வாழ்வின் குறிக்கோள்.
-சா
★★★★
எல்லோருடனும் இணக்கம் கண்டிருப்பதே வாழ்க்கை என்பதை உணர்வதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உயர்ந்த பாடம்.
- ஆ
★★★★
இந்த சின்னஞ்சிறு எண்ணங்கள் இலைகளின் கலகலப்புகள் அவை மகிழ்ச்சியாக முணுமுணுப்பது என் உள்ளத்தில் தான்.
- கா.ப.
★★★★