10
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
முழுமையான வைகறைப் பொழுது அருகில் நெருங்கி வருகிறது. அந்த நேரத்தில் இதர உயிர்களுடன் உனது உயிர் ஒன்றிவிடுகிறது. முடிவில் உன் குறிக்கோளையும் நீ புரிந்து கொள்கிறாய். - க.கொ
★★★★
இருள் படர்ந்திருக்கும் சந்துகளிலும் நம்பிக்கை ஒளியை உறுதி செய்வது இறைவனால் மட்டுமே இயலும். - நி
★★★★
சிரிப்புடன் பொங்கி எழுகிறது கடல். மென்மையான ஒளியுடன் முறுவலிக்கிறது கடற்கரை. சேயின் தொட்டிலை ஆட்டும் தாய்போல இருக்கும் அலைகள் குழந்தையின் செவிகளில் விழும்படிப் பொருளற்ற தாலாட்டைப் பாடுகின்றன. குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகிறது கடல்; வெளிறிய முறுவல் பூக்கிறது கடற்கரை! - வ.பி
★★★★
கருப்பையிலிருந்து வெளியேறிய பின்னர்தான் குழந்தை தாய் முகம் காண்கிறது. உன்னிடமிருந்து நான் பிரியும்போதுதான் உன் முகத்தை நான் எளிதில் காண முடியும். - த.கெ
★★★★
மனத்தின் கிளர்ச்சியற்ற இருண்ட குகைகளில், பகலில் பயணிகள் விட்டுச் சென்ற சிதறல்களைக் கொண்டு