118
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
விண்ணகத்தில் முழு நிறைவான அமைதி நிலவுகிறது உலக மனத்தையும் தன் அணைப்பில் இறுத்திக் கொள்வது போன்று தோன்றுகிறது.
-ஈ
★★★★
பனித்துளி போல் நொய்தானது மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் போதே அது மறைந்து விடுகிறது. ஆனால் துயரமோ உறுதியானது, நிலைத்திருப்பது.
துயரளிக்கும் நேயத்தை உன் கண்களில் உயிர்த் தெழட்டும்.
-தோ
★★★★
மற்றெல்லா நாள்களைக் காட்டிலும் இன்று எனக்கு மிகவும் உகந்த நாள். காரணம் இன்று என் அன்பிற்குரிய இறைவன் என் வீட்டில் ஒரு விருந்தாளி.
-க.பா.
★★★★
இந்த உலகில் நாம் பிறவியெடுத்திருப்பது அதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல, அதை ஏற்றுக் கொள்வதற்காகவே.
-ஆ
தாமரை இலைமேல் தத்தளிக்கும் பனித்துளிபோல் சிறப்பான காலம் என்கிற நெஞ்சத்தின் மேல் என் வாழ்க்கை தத்தளிக்கிறது.
-ஈ
★★★★
உலகத்தோடு தனக்குள்ள உறவு முறையைப் புரிந்து