இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
மற்றவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமே நமது உள்ளுயிர் தன்னைப் பற்றிய உண்மையைக் கண்டு கொள்ள முடியும்.
-சா
★★★★
உனது வாக்கு இரவின் முகத்திரையைக் கிழித்து விட்டிருக்கிறது. இரவின் மொட்டுகள் திறக்கப்படுகின்றன.
-எ
★★★★
மதம் உயிரற்று இறுகி முடங்கிப்போய், சுமைபோல அழுத்துகிறது.
-கீ
★★★★
வாழ்க்கையின் நல் வாழ்த்துகள் கிழக்கிலிருந்து மேற்குக்குப் பரவுகின்றன.
-எ
★★★★
துன்புறுத்தப்பட்ட நிலையில் எனது மீட்டப்படாதத் தந்திகள் இசையை இரஞ்சுகின்றன.
-மின்
★★★★
துயரப்பாட்டை வழங்கிக் கொண்டு தயங்கி நிற்கும் நெஞ்சத்தின் தந்திகளைத் தாண்டிக் கொண்டு உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது.
-ப.ப.
★★★★