124
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
ஒளியில் நீராடியெழுந்த காலைப் பொழுதுபோல் வெண்ணிற ஆடை உடுத்தி மலர் கொய்யும் உன்னை நான் கண்டேன், நான் கூறினேன் "எனக்கு உதவிட என்னை ஏற்பதின் மூலம் எனக்கு பெருமை அளி"
-நா
★★★★
நமது வாழ்க்கையை அதன் மகிழ்ச்சிகளிலும், துயரங்களிலும், அதன் ஆக்கங்களிலும் தேக்கங்களிலும் அதன் எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் முழுமையாக விரும்புவதற்கான ஆற்றலை எங்களுக்கு அளி.
-சா
★★★★
குழந்தாய், காற்றின் நீரின் மழலையையும், மலர்களின் அமைதியான கமுக்கங்களையும், முகில்களின் கனவு களையும், காலை வானத்தின் ஒசையற்ற வியப்பான பார்வையையும் என் நெஞ்சத்திற்கு நீ கொண்டு வருகிறாய்.
-மின்
★★★★
குழந்தைகள் இறைவனால் விரும்பிப் படைக்கப் பட்டவர்கள்.
-ஆ
★★★★
நேயத்தில் வேறுபாடு என்கிற உணர்வு அற்றுப் போகிறது. தனக்கென விதித்திருந்த எல்லையைக் கடந்து எல்லையற்ற என்கிற நிலையை எட்டி முழுமை என்கிற தனது உயர்ந்த குறிக்கோளை மாந்த உயிர் அடைகிறது.
-சா
★★★★