இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
126
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
இலையுதிர்கால காலைப்பொழுதில் என் விருந்தாளி வீடு தேடி வந்திருக்கிறார்.பாட்டிசை, என் நெஞ்சமே. அவருக்கு நல்வரவு கூறு.
-எ
★★★★
எனது பணி முடிந்து விட்டது. கடலிலிருந்து தரைக்கு இழுக்கப்பட்டுள்ள படகுபோன்றவன் நான். மாலைப் பொழுதில் அலையெழுப்பும் நாட்டில் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
- ப.ப.
★★★★
மாந்தன் அடையும் உயர்ந்த பேறு அன்பு ஒன்றே, ஏனெனில் அதன் மூலம் அதிகமானதொரு ஆற்றல் தன்னிடம் உள்ளது என்பதையும், தான் அனைவரிடம் நெருக்கமுள்ளவன் என்பதையும் அவன் நன்குணர்கிறான்.
一சா
★★★★
எந்த ஒரு படகு எல்லா உலகங்களுக்கும் புகலிடமோ, அதைத் துண்டு துண்டாக்கிவிட்டுக் கடலைக் கடக்க முடியுமா?
கீ
★★★★
உன் இறைவன் அருகிலேயே இருக்கிறான். அப்படியும் அவனைக் காணப் பனை மரம் ஏறிக் கொண்டிருக்கிறாய்.
- க.பா
★★★★