இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
127
இடர்படும் எளிய மக்களுடன்தான் எனது வாழ்க்கையும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
-க.கொ
★★★★
எல்லையற்றது என்பது எல்லைக்குட்பட்டது என்கிற உண்மை விண்மீன்களடங்கிய வானத்தின் முழுமையிலோ மலரின் அழகிலோ காணப்படுவதில்லை. மனிதனின் உள்ளுயிரில்தான் அது உள்ளது.
一சா
★★★★
இனிமையானது ஆனால் முழுமையற்ற நெஞ்சத்தில் சிறைப்பட்டிருக்கும் மொட்டில் அழகு சிரிக்கிறது.
-மின்
★★★★
குறையுள்ள ஒன்றின் அன்பைப் பெற, நிறையுள்ளது ஒன்று அழகை அணிகலனாக அணிந்துள்ளது.
-ப.ப.
★★★★
நீ தனியாக வாழ்ந்த போது, உன்னையே நீ புரிந்து கொள்ளவில்லை.
-க.கொ
★★★★
நான் வந்தேன், நீ எழுந்தாய் வானத்தில் ஒளி அரும்பியது.
-க.கொ
★★★★