இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
128
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
கெட்டது ஒதுங்க வேண்டியதுதான் அதனிடத்தில் நல்லது தோன்றவேண்டும்.
-சா
★★★★
நாளைத் தொடங்கும் முன் உன்னைத் தொட்டுணர்வதாக உன்னிடம் வந்துள்ளேன்.
-எ
★★★★
கடவுளை எவன் கண்டிருக்கிறானோ, அவனுடைய பணியும், அவனுடைய ஓய்வும் இசையினால் நிரம்பியுள்ளது. அன்பின் ஒளியை அவன் எங்கும் தெளிக்கிறான்.
-க.பா
★★★★
மாந்த வரலாற்றில், இறைவனின் வாழ்விசை
மாந்தனின் இசையை, ஒத்திசைவைத் தொடர்பு இருக்கின்றதை கேள்விப்பட பல வாய்ப்புகள் வந்துள்ளன.
-ஆ
★★★★
} இலையுதிர் கால வானத்திற்கு உள்ளார்வ வளத்தயும் மாந்தத் துடிப்பையும் அளிப்பது நமது பார்வையே.
- நினை
★★★★
வானம் பொழிகிறது; என்னுள்ளம் இறைவனைக் காணத் துடிக்கிறது. உலகின் ஓசை நயம் எங்கு எழும்பித் தாழ்கிறதோ, அந்த இடத்தை என் நெஞ்சம் சென்றடைந்துள்ளது.
-க.பா
★★★★