இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
130
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உயர்ந்தெழும்பும் அலைகளுக்கேற்பத்தான் கடல் இசை பாடுகிறதா? தாழ்ந்து தணியும் அலைகளுடன் அந்த இசை ஒன்றுபடுவதில்லையா?
-க.கொ
★★★★
மலர்கள் மலர்வதற்கான விடுதலையைப் பெற்றதற்காகக் கானகத்தின் வேண்டுதலையைக் கேட்டிடுவாய்.
-மின்
★★★★
புலி வேட்கையால் தவிப்பவர்களுக்குச் சிறிதளவே போதுமென்றால் கூட எனது மகிழ்ச்சிப் பெருக்கில் என்னிடமுள்ள நீரை எல்லாம் நான் வாரி வழங்குகிறேன்," என்று இசையருவி பொழிகிறது.
-ப.ப
.
★★★★
அமைதியில்லாத என் மனத்தைக் காரணம் காண முடியாத மகிழ்ச்சியால் சூழ்ந்து கொண்டது இலையுதிர் காலம்.
-நினை
★★★★
படைப்புலக வாழ்க்கையாகிற தன் தொழிலின் தொடக்கத்தில் இன்று மாந்தன் இருக்கிறான், தன்னிடமிருக்கும் நிறைசெல்வத்திலிருந்து அவன் வழங்கவேண்டும்.
- ஆ
★★★★
எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கில் இந்த