இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
132
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
நேயத்தைப் போன்று, மூடுபனியும் குன்றுகளுடைய நெஞ்சங்களை வருடுகிறது; அழகின் சிரிப்புகளை வெளிக் கொணர்கிறது.
- ப.ப.
★★★★
வாழ்வது ஒரு பாவமானால், அதை மெய்ப்படுத்துவதற்கு அது காத்திருப்பதில்லை.
- சா
★★★★
உன் நேயத்தின் பருதி ஒளி எண் எண்ணங்களின் முகடுகளை முத்தமிடட்டும்.
-எ
★★★★
மாந்தனின் நிலையான வாழ்க்கையில் நான் வாழ விரும்புகிறேன்.
-நினை
★★★★
வாழ்க்கையின் முறையைக் கண்டறிந்து, அதன் வழிச் செல்வதன் மூலம் நாம் சிறப்புற முடியும்.
- சா
★★★★
வாழ்க்கையின் நிழல் படிந்த ஆழத்தில் சொற்களால்
சொல்லமுடியாத நினைவுகளில் தனிமைக் கூடுகள் குடி கொண்டுள்ளன.
-மின்
★★★★