இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
பொழுது, உண்மையிலேயே நாம் அவனைச் சந்திக்கிறோம். வரங்களை வேண்டிச் செல்லும் பொழுது, அவ்வாறில்லை. - எ.எ
★★★★
குழந்தாய், அரசன் உன்னை நேசிக்கிறான். உன்னைக் காண அவனே வந்து கொண்டிருக்கிறான். - அறவே
★★★★
இந்தப் புல், இப் புழுதி, அந்த விண்மீன்கள், ஞாயிறு, திங்கள் இவற்றின் மறைவில் நிற்கும் நீ ஓவியமா? வெறும் ஓவியமா? - நூ.பா
★★★★
அவ்வப்பொழுது உனது உயர்ந்த கேட்போர் அவையிலிருந்து கீழிறங்கி வா. இன்ப துன்பங்களுக்கிடையே வாழ்ந்து பார். என் நெஞ்சத்தைத் தொடுமாறு இசை பொழிவாய். - படை
★★★★
என் தலைவா,தந்திகள் மீட்டப்படும்போது அதிகமாக வலி ஏற்படுகிறது.
இசைக்கத் தொடங்கு; என் வலியை மறந்திருப் பேனாக. கருணையற்ற இந்த நாள்களில் உன் உள்ளத்தில் நுகர்ந்ததை நான் அதில் உணர்வேனாக, - க.கொ
★★★★