த. கோவேந்தன்
141
மென்றால் அண்டத்தின் அடி ஆழத்தில் நாம் வேர் பிடிக்க வேண்டும். -சா
★★★★
இறைவனின் அருகில் அமர்ந்திருக்கும் சீரும் சிறப்பும் பெற்ற பேறு பெற்றவர் வெகு சிலரே. ஆனால் என் போன்ற அறிவிலிகளையும் தன் கைகளினால் வாரியெடுத்து அரவணைத்துத் தன் அடியார்களாகவே வைத்திருக்கிறான் அவன். -க.கொ
உன்னிடம் வைத்துக் கொள்வதற்காக மலர் பறிப்பதற்குக் காத்திராதே. மேலே நடந்து செல். ஏனெனில் நீ செல்லும் வழியெல்லாம் மலர்கள் மேலும் மேலும் சிறகு விரித்துச் செல்லும். -ப.ப
★★★★
பொருள் புரியாதிருந்த காலத்தில், உனது சைகையின் உட்பொருளைத் தினையளவு தும்பும் தூசியும் கூட மறைத்து விட்டிருந்தது.
இன்று நான் நுண்ணறிவினன் ஆகிவிட்டேன். ஆகவே முன்னர் மறைக்கப்பட்டிருந்ததெல்லாம் எனக்குப் புலப்படுகிறது. -க.கொ
★★★★
தூரத்திலிருக்கும் வேனிற்கால இசை தனது முந்தைய கூட்டைத் தேடிக் கொண்டு இலையுதிர் காலத்தைச் சுற்றிச் சிறகடித்துப் பறக்கிறது. -ப.ப
★★★★