142
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
துயரத்தின் இருண்மைக்குப்பின், இன்று அதிகாலைப் பொழுது விடிகிறது. -கோ
★★★★
இழப்பின் மூலம் நாம் நமது என்பதைப் பெறுகிறோம். நம்மை நாம் அளிப்பதினாலேயே உயர்கிறோம். -சா
★★★★
என் நெஞ்சமே, உன் பயணத்தைத் தொடர்வாய்; இருக்க வேண்டியவை நம்முடனேயே இருக்கட்டும்.
ஏனெனில், காலை வானில் உனது பெயர் பொறிக்கப்பட்டுவிட்டது. எவருக்கும் காத்திராதே. -க.கொ
ஆன்மிக உலகை உருவாக்குவதில், நாம் இறைவனின் பங்குதாரர்கள். -ஆ
★★★★
எல்லை, எல்லைக்கப்பால், சட்டம், விடுதலையாவற்றையும் தன்னுள்ளில் இணைத்து வைத்துள்ளது அழகு. -சா
★★★★
இரவையும் பனித்துளியையும் நெருங்குவதுதான் அரும்பின் ஆசை. ஆனால் முழுமையாக மலர்ந்துள்ள மலர் அடைய விரும்புவது பகலின் விடுதலையே.
என் நெஞ்சமே, உறையிலிருந்து வெளி வந்துவிடு, மேலே முன்னேறிச் செல்! -க.கொ
★★★★