த. கோவேந்தன்
13
பாப்பாவுக்குத் தெரிந்த அறிவுச் சொற்கள் எத்தனையோ! எனினும் அவற்றின் பொருளை அறியக் கூடியவர் இவ்வுலகில் மிகச் சிலர் தான்! - வ.பி
★★★★
காலைப் பொழுதில் ஒளியாகிய தன் உள்ளத்தை உலகம் திறந்து வைத்துள்ளது. வெளியே புறப்பட்டு, வருவாய் என் உள்ளமே. அன்புடன் அதைச் சந்திப்பாயாக. - ப.ப
★★★★
மனித உலகில் சிறப்பானவை யாவற்றையும் இறைவனிடத்தில் மனிதன் வைத்துள்ள நம்பிக்கை எழுப்பியுள்ளது.
- படை
★★★★
திடீரென எவ்வாறு ஏன் நெஞ்சம் தன் வாயில்களைத் திறந்து வைத்துள்ளது? எனக்குப் புரியவில்லை. - நினை
★★★★
அன்பிற்குரியவளே, உன்னை நான் விரும்புகிறேன். என் அன்பே என்னை மன்னித்து விடு. வழிதவறிய பறவையின் நிலையில், நான் இருக்கிறேன். - தோட்
★★★★
நீரோடையின் முணுமுணுப்பைப் போன்று, என் அன்புக்குரியவளுடன் எனது பாடல்கள் ஒன்றிப்போயுள்ளன. - கா.ப
★★★★