இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
149
நமது நெஞ்சத்தில் அன்பு சுரக்கும்போது, சிறிய தொரு பரிசு கூட நமக்கு முழு நிறைவளிக்கிறது. -சா
★★★★
எனக்கு வழிகாட்டியாக இருப்பதற்காகச் சாலை ஓரத்தில் காத்திருக்கும் உன்னை எங்கே தவறவிட்டு விடுவேனோ என்ற அச்சம் என்னை மற்றவர்களால் நடத்திச் செல்லப்படுவதிலிருந்து தடுத்து நிறுத்துகிறது. -க.கொ
★★★★
சட்டதிட்டங்களிலிருந்து அன்பு வழிக்குக் கட்டுப்பாடிலிருந்து விடுதலைக்கு, அறநெறியிலிருந்து ஆன்மிக வழியில் மாந்த உள்ளுயிர் உலவிக் கொண்டிருக்கிறது. -சா
★★★★
உணரக் கூடியதாக, தனக்குரியதாக, மாந்தத் தன்மை பொருந்தியதாக ஏதாவதொன்று எங்கெங்கெல்லாம் தென்படுகிறதோ, அங்கெங்கெல்லாம் பெண்ணின் உலகம் உள்ளது. -ஆ
★★★★
நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரே பொருள் அன்பு தான். -சா
★★★★
சம்மட்டி அடியன்று, தண்ணீரின் அலைப்பில்