இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
153
உருவமில்லாத மகிழ்ச்சிப் படைப்பில் ஈடுபட வேண்டும்; உருவத்தை உருவாக்க வேண்டும். -சா
எண்ணற்ற விண்மீன்களில் ஏதோவொன்று முன்பின் அறியா இருளினூடே வாழ்க்கையில் வழிநடத்திச் செல்ல உள்ளது என நான் எண்ணுகிறேன். -ப.ப
★★★★
அடைய வேண்டுமென்ற எண்ணமொன்றே அடைந்து விட்ட பொருள்களைவிட நம்மை உயர்த்துகிறது என்பதை அறிந்து கொள்கிறோம். -சா
★★★★
பெண்ணே, உன் மென்மையான விரல்களினால் என் உடமைகளைத் தொட்டிட்டாய். இசை போன்று உன் கட்டளை பிறந்தது. -ப.ப
★★★★
ஆழமான நமது அன்பில், அடைதலும், அடையாமலிருத்தலும் சமச்சீரிலேயே இழையோடிச் செல்கின்றன. -சா
★★★★
நீ என் நெஞ்சத்தைக் கவர்ந்துவிட்டாய். என் நெஞ்சமும் தனது தலைசிறந்த செல்வத்தை உனக்கு வாரி வழங்க அணிமாக உள்ளது. -ஈ
★★★★