இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
156
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
விண்ணில் பறவைக் க்கூட்டங்கள்போல் என் மனத்தில் எண்ணங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் சிறகடிப்பு ஓசையை நான் கேட்கிறேன். - -ப.ப
★★★★
வழிப்போக்கனே, துணைப் பயணியின் வாழ்த்துகள் உனக்கு இதோ. - -குறு
★★★★
சேர்த்துக் கொண்டே போவது என்பது கைகூடுதல் அன்று என்பதை மாந்தன் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளொளிதான் அவனை உலகிற்கு அடையாளம் காட்டுகிறதே அல்லாமல் வெளித் தோற்றங்கள் அல்ல. - -சா
★★★★
தனது நோவினால் ஏன் ஆன்மாவை முத்தமிடுகிறது உலகம். அதற்கு மாற்றாக எனது பாடல்களைக் கேட்கிறது அது. - -ப.ப
★★★★
வையகத் தலைவன் தனது அரியணையின் நிழலைப் பரப்பாமல் விட்டு வைத்திருப்பது மாந்தனின் தான் என்ற நிலையைத்தான். அதற்கு உரிமை அளித்திருக்கிறான் அவன். - -சா
★★★★