பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

157


நெஞ்சமாகிய என் பாத்திரத்தை இந்த அமைதியான நேரத்தில் முக்கியிருக்கிறேன்; அன்பினால் அது தன்னை நிறைத்துக் கொண்டுள்ளது. - -ப.ப

தொலைவிலுள்ள குன்றுகளிடையே தங்களை மறைத்துக் கொண்டு ஆற்றின் நீரை நிரப்புகின்றன முகில்கள். - -ப.ப

விளக்குகளைத் தனித்திருக்கும் இரவின் விளக்குகளை, என் நெஞ்சமே, அணைத்துவிடு.உனது கதவுகளைத் திறந்து வைக்க ஆணை வருகிறது. ஏனெனில் பகலின் வெளிச்சம் எங்கேயோ இருக்கிறது. - -எ

அளவிட இயலாத உன் தனிமையினுடே உன்னை அழைத்திடும் காதலனிடம் உன் நெஞ்சத்தைத் தொலைத்து விட்டாயா? - -நா

விழித்தெழு, அன்பே, விழித்தெழு. என் வெறும் கிண்ணியை நிறைத்திடு; உன் இசையின் மூச்சுக் காற்றினால் இரவைக் கலக்கிடு. - -க.கொ