இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
என் தலைவனே, உனது பேச்சு எளிமையானது, ஆனால் உன்னை பற்றிப் பேசுகிறவர்களின் பேச்சு அப்படி யில்லை. - க.கா
★★★★
என் குழந்தையின் தனி உலகத்துக்கு நடுவில், அமைதி நிலவும் ஒரு சிறுமூலை கிடைத்தால் கூடப் போதும்; அவ்வளவு ஆர்வம் எனக்கு:
- வ்.பி.
★★★★
சுமையாயிருக்குமாகில் கொடையாளிகளின் பட்டியலிலிருந்து. என் பெயரை நீக்கி விடுவாய். ஆனால் என் பாடலையன்று. -
- மின்
★★★★
களைத்துள்ள உறுப்புகளுக்குத் தூக்கம் போன்று அவள் எனக்கு இனியவள்.
- கா.ப
★★★★
என் நண்பனே, எனது அன்பு என்றுமே உனக்கு சுமையாயிருந்து விடக்கூடாது. அது பலனளிப்பது என்று புரிந்து கொள். - மின்
★★★★
மனிதன் குழந்தையாகவே பிறக்கிறான். வளர்ச்சியின் ஆற்றலே அவனது ஆற்றல்.
-ப.ப
என் அன்பே, தோட்டத்தில் என் கூட உலாவிட வா.