இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
163
இறப்பின் கூறு ஒன்று; வாழ்க்கையின் கூறுகள் பல; இறைவன் இறந்தால் மதம் ஒன்றாகவே மலர்ந்துவிடும்.
-ப.ப
★★★★
காற்று தண்ணிர் இவற்றின் ஒசையினிடையே சிக்கியிருக்கிற அலைகளின் மேல் பாவலனின் மனம் மிதக்கிறது கூத்தாடுகிறது.
-க.கொ
★★★★
ஒர் எல்லைக்குள் அடங்குகிற அறிவை அதற்காக மட்டுமே தேடியலைபவன் உண்மையைக் காணமுடிவதில்லை.
-ஆ
★★★★
காலைப் பறவை பாடுகிறது.
பொழுது விடிவதற்கு முன்னமேயே பொழுது புலரப் போகிறது என்பதை எங்கிருந்து அறிந்து கொண்டது; அதே போல் இரவாகிற பறவைவிலங்கு கரும் சுருள்களில் விண்ணைத் தன் பிடியில் வைத்திருப்பதையும் எவ்வாறு அறிந்து கொள்கிறது.
-க.கொ
★★★★
நல்லவற்றின் மூலமே நமது உள்ளுயிர் வளர்க்கப்படுகிறது. அதுவே அவற்றின் பிணைப்பிற்கு எடுத்துக் காட்டு.
-சா
★★★★